குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, சீனா தலைநகர் பெய்ஜிங் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 30 நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெய்ஜிங் வந்தடைந்த ஒலிம்பிக் ஜோதி, முக்கிய நகர் வழியாக பயணிக்கவுள்ளது. மலைப்பகுதிகள் வழியாகவும், சீனப் பெருஞ்சுவர் வழியாகவும் ஒலிம்பிக் ஜோதி பயணிக்கவுள்ளது. குறிப்பாக, ரோபோ உதவியுடன், தண்ணீர் வழியாகவும் ஒலிம்பிக் ஜோதியை கொண்டு செல்ல உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.