புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் புதுச்சேரி மாநில குடியுரிமை பெற்றவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதுச்சேரி குடியுரிமையை பயன்படுத்தி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றிருப்பதாக பெற்றோர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.

About The Author