சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அடுத்த நீதிபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு ஆண் யானை பயிர்களை சேதப்படுத்தியது. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று (ஏப்.,3) நள்ளிரவு தார் காடு ஏரி அருகே மயில்சாமி என்பவரது விவசாய நிலத்தில் புகுந்த ஆண்யானை அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால் யானை நீரில் மூழ்கி உயிரிழந்தது. இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரக ஊழியர்கள் விரைந்து சென்று யானையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.