தேவகோட்டை முகமதியர் பட்டனம் பகுதியில் வசிப்பவர் உமர்பாரூக்,43. பெயின்டரான இவர், தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். முனகல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.