About us
-
மத்திய பட்ஜெட் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது” “பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்பு” “இயற்கை விவசாயம், காய்கறி உற்பத்தி தொடர்பாக சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன” “தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது” மத்திய பட்ஜெட் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து
-
காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவர் ராஜினாமா
தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் யுவராஜா
-
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
இன்றைய பெட்ரோல், டீசல் விலை (தோராயமாக) பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ரூபாய் 100.75 ஆகவும் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ரூபாய் 92.34 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று ஆடி 06 (22.07.2024) 130வது நாளாக நீடிக்கிறது
-
மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேசன் கடைகளில் விற்க -அனுமதி தரக் கோரிய வழக்கு
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? ஐகோர்ட் கேள்வி தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கள் விற்பனை தொடர்பாக ஜூலை 29-ல் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேசன் கடைகளில் விற்க -அனுமதி தரக் கோரிய வழக்கை ஒத்திவைத்தது.
-
செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி என வழக்கறிஞர் தகவல். செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலத்தில் பதுங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்த ஜெய்சிங், நோகர் சிங் ஆகிய 2 இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலம் போலீஸ் உதவியுடன் இருவரையும் கைது செய்து மத்தியப்பிரதேசம் அழைத்துச் சென்றது ம.பி.போலீஸ்.
-
இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ்
சென்னை இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இளைஞர் சந்துரு (19) கைது செய்யப்பட்டார். ஐபி எண்ணை வைத்து வீடியோ வெளியிட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இளைஞர் சந்துரு கைது கைதாகினார். வழக்கில் சந்துருவுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட ரஞ்சித் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் வெளியேற்றம்
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 68,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 50,801 கனஅடி நீரும், கபினியில் இருந்து 17,375 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
-
தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது
டெல்லி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
-
நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை
நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில்,”நீட் தேர்வின் ஒவ்வொரு நடைமுறை செயல்பாடுகளிலும் முறைகேடுகள் உள்ளன. முறைகேடுகள் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன.வினாத்தாள் கசிவு என்பது அவை வங்கி லாக்கர்களுக்கு அனுப்பப்பட்டதற்கு முன்பே நிகழ்ந்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை,”இவ்வாறு வாதிடப்பட்டது










