கர்நாடகாவில் மோடி தெரு தெருவாக போய் ஆண்டு கொண்டு இருந்த பிஜேபியை தோல்வியடைய செய்துவிட்டார் என ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
கர்நாடகாவிற்கு பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க சென்றதால் தான் கர்நாடகா தேர்தலில் பிஜேபி தோல்வியடைந்தார்கள், அதேபோன்று தமிழகத்துக்கும் மோடி வர உள்ளதால் கண்டிப்பாக 40 தொகுதியிலும் வெற்றி நமக்குத்தான் என ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார். சென்னை திருவெற்றியூர் பகுதியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ஏழை எளியோருக்கு தையல் இயந்திரம் மற்றும் மாணவருக்கு லேப்டாப் உள்ளிட்ட ஆயிரம் பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அரசு கொறடா கோவி செழியன், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வைமா அருள்தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1962ல் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் திமுக வளர்ந்து விடும் என்ற நோக்கத்தில் அன்றே மத்திய அரசு தடை சட்டத்தை கொண்டு வந்ததாகவும் 153 ஏ என்ற பிரிவை திமுக விற்காகவே கொண்டு வந்தனர். திமுகவை தடை செய்ய நினைத்தார்கள் அந்த தடையும் மீறி வளர்ந்த இயக்கம் திமுக என்றும் மோடி மறந்துவிடக்கூடாது என தெரிவித்தார்.