தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அப்டேட் குறித்து வெங்கட் பிரபு வெளியிட்டார்.
இந்தப்படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது. கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இருவரும் புதிய கீதை திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.
முன்னதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
“தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற தலைப்பு டிசம்பர் 31 அன்று ம வெளியிடப்பட்டது, இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து, படத்தின் அறிவியல் புனைகதை கருப்பொருளைக் கிண்டல் செய்யும் இரண்டாவது விளம்பரப் போஸ்டர் ஜனவரி 1 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
அதன் படி, ”சொல்லலாம் னு நெனச்சேன்! இப்போ இதுக்கு மேல எப்படி னு நீங்க சொல்லுங்க “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.