இந்த கோயில்களுக்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளில் கூட்டமாக பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். தமிழ் மாத கடைசி மற்றும் முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்தும் திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் பழமை வாய்ந்த திருமலை நம்பி கோயில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.

புலிகள் கணக்கெடுப்பு பணி முடிந்த நிலையில், களக்காடு புலிகள் காப்பக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மார்ச் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் நாளை முதல் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

About The Author