பல்லடம் அருகே, பல நுாறு யூனிட் மண் கடத்தப்பட்டதால், ஓடை வழித்தடத்தில் புதிதாக குட்டை ஒன்று உருவாகியுள்ளது.
பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தாம்பூச்சிபாளையம் செல்லும் ரோட்டில், நீர் வழித்தட ஓடை உள்ளது. இதில், பலநுாறு யூனிட் மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.குளம் – குட்டைகளுக்கு நீர் ஆதாரமாக உள்ள நீர் வழித்தடம், புதர்கள் மண்டி, பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஓடை வழித்தடத்தில் ஏறத்தாழ, 30 அடி ஆழத்துக்கு மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.