நடப்பாண்டில் 3101 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது.
சென்னையில் உள்ள ஐ.சி.எப். எனும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. மேலும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டி தயாரிப்பு திட்டத்தில் பெட்டிகள் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.தொடர் சிக்கல்ஐ.சி.எப்.பில் 2019 – 2020ல் 4238 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கொரோனா ஊரடங்காலும் ரயில் பெட்டி தயாரிப்பு தளவாடங்கள் இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாட்டாலும் 4166 பெட்டிகளே தயாரிக்க முடிந்தது. இதேநிலை தொடர்ந்ததால் 2020 -2021ம் ஆண்டில் 1954 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.இந்த நிலையில் 2021 – 2022ம் ஆண்டில் 3678 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தளவாடங்கள் உரிய காலத்தில் கிடைக்காததால் 3100 பெட்டிகள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தயாரிப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.