தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் போது அதிகாரிகளால் குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி தான் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிரதான வருவாய். இதில் சரியான முடிவை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய காலத்தில் எடுக்காததால் பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. அதனால் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டது.உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2018 ஜூலை 19ல் குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்; வணிக கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி அரசு உத்தரவிட்டது.

அப்போது இந்த உயர்வு விகிதங்களை காட்டிலும் அதை அமல்படுத்துவதில் அதிகாரிகள் செயல்பட்ட விதம் தான் பெரிய அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் அன்றைய அ.தி.மு.க. அரசு சொத்து வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக 2019ல் அறிவித்தது.சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சொத்து வரி உயர்வில் அமைதி காத்து வந்த அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் இதுதான் சரியான நேரம் என்று சொத்து வரியை 1௦0 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

About The Author