முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்து வரும் பயணிகள் இதனால் சிரமத்திற்குள்ளாகினர் இதையடுத்து தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பயணிகளின் மத்தியில் எப்போது முன்பதிவில்லா தொடக்கம் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளின் சேவையினை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அனைத்து பகுதிகளிலும் உடனடியாக செயலபடுத்தாமல் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்