ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா தான் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதால், பொறுப்பு எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சிறை செல்லும் போது கூட ஓ.பன்னீர் செல்வத்தை தான் தற்காலிக முதலமைச்சராக நியமனம் செய்தார். அப்படியிருக்க அவரது மறைவுக்கு பிறகு அவர் தான் கட்சியின் தலைமை பொறுப்பையும், முதலமைச்சர் பதவியையும் ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், சசிகலாவின் இந்த அதிரடி மாற்றம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் விரக்தியின் உச்சத்தில் ஜெயலலிதாவின் சமாதியில் தர்ம யுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அதே வைராக்கியத்தோடு அவர் அதிமுகவை தனியே பிரித்திருந்தாலும் கூட அவருக்கு ஆதரவு அதிகரித்து இருந்திருக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.