தினமும் பழச்சாறு அல்லது பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் ஆரஞ்சு பழத்தின் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
* ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
* ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.
* ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின்-சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
* ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
* முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிகபடுத்துகிறது.
* வாய் துர்நாற்றத்தை அகற்றும். ஈறுகளில் வீக்கம், சொத்தைப் பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
* தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.