உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்பது அரசின் தார்மீக கடமை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார், உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் தகவல்கள் வந்தது. இந்த தகவலலை அயலக வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பேசினோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது  ஒன்றிய அரசின் போக்காக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை சேதத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகமிக சொற்பமானது. முதல்வர் இது குறித்து மீண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி

About The Author