15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது. அணிகள் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் 5 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஐ.பி.எல். அணிகள் வருகிற 14 அல்லது 15-ந் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 25 சதவீத ரசிகர்களை அனுமதிக்க மராட்டிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.