ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. கவுகாத்தியில் நடைபெறும் ‘எப்’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது. 
இதில் 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழக அணி கால்இறுதி வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். ஆமதாபாத்தில் நடைபெறும் ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் கட்டாயம் வெற்றி நெருக்கடியுடன் மும்பை அணி, ஒடிசாவை எதிர்கொள்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

About The Author