உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான 4 விமானங்கள் டெல்லி வந்தடைந்தனர்.உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் அண்டை நாடுகளான போலாந்து, ருமேனியா, ஹங்கேரி வழியாக சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன் ஒரு பகுதியாக ருமேனியா, ஹங்கேரி, போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்களில் 628 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்.அவர்களுடன் வளர்ப்பு பிராணிகளையும் அழைத்து வந்தனர்.

இது குறித்து பேசிய அவர்கள், உக்ரைனிலேயே வளர்ப்பு பிராணிகளை விட்டுவிட மனம் இல்லை என்று உருக்கமாக தெரிவித்தனர்.விமானத்தில் இருந்த மாணவர்களுடன் ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங், சந்தித்து தைரியம் அளித்தார். டெல்லி விமான நிலையத்தில் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இதனிடையே உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களை ஏற்றி வந்த 4வது சி17 விமானம் டெல்லிக்கு அருகில் உள்ள ஹிந்தன் விமானத் தளத்தை வந்தடைந்தது. தாயகம் திரும்பிய மாணவர்களை ஒன்றிய பாதுகாப்புத் துறை அஜய் பட் வரவேற்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

About The Author