தேமுதிக தலைவர் விஜயகாந்தின் போட்டோ ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், அரசியலில் இருந்தும் சினிமாவில் இருந்தும் விலகினார். விஜயகாந்த் கடைசியாக தனது மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமான சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கம்பீர தோற்றத்தில் இருந்த விஜயகாந்தை அந்த புகைப்படத்தில் பார்க்கும்போது, எப்படி இருந்தவர், இப்படி ஆள் அடையாளமே தெரியாத நிலையில் உள்ளாரே என நினைக்க தோன்றுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி