கனமழையால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வாரமாக பெய்த மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒரு வாரகாலமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.
இந்த கனமழைக்கு ஏற்கெனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஆஸ்திரேலியாவின் வெள்ளம், காட்டுத்தீ, சூறாவளி மற்றும் வறட்சியை அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
“கடுமையான காலநிலை மாற்றத்தில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை உலக சராசரியை விட வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் அதிக வெப்பநிலையால் வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதத்தை கொண்டுள்ளது, அதாவது மழைப்பொழிவு நிகழ்வுகள் மிகவும் தீவிரமடைந்து வருகின்றன.”
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.