15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். இந்தியாவை பொருத்தமட்டில் இதுவரை மாநிலங்களுக்கு 166.68 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகமானது இது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.