கர்நாடக மாநில அரசு, அவருக்கு ‘கோல்டன் பாஸ்’ வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அரசு பேருந்துகளில் அவர் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பலரும் போட்டிப் போட்டு பரிசுகளை அறிவித்து வருகின்றனர்.
டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் 87.03 மீட்டருக்கு ஈட்டியை வீசிய நிலையில் அதைக் கூட பிற வீரர்களால் எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். தனிநபர் பிரிவில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் கிரேட் 1 அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதேபோல் கர்நாடக மாநில அரசு, அவருக்கு ‘கோல்டன் பாஸ்’ வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அரசு பேருந்துகளில் அவர் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம். இத்தகைய பாஸை கர்நாடக அரசு வெளியிடுவது இதுவே முதன்முறையாகவும்.
இதேபோல், இண்டிகோ விமான சேவை நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் விமானத்தில் ஓராண்டுக்கு எங்கு வேண்டுமானாலும் நீரஜ் சோப்ரா பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.