வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் பெருஞ்சீரக விதைகள் அதிக நார்ச்சத்து நிறைந்தவை.
பெருஞ்சீரக செடி என்பது உண்ண கூடிய தளிர்கள், இலைகள் மற்றும் விதைகளுக்காக வளர்க்கப்படுகிறது. நம் வீட்டு சமையலறையில் முக்கிய மசாலா பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் பெருஞ்சீரகம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது.
பெரும்பாலான இந்திய வீடுகளில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பொதுவான பழக்கம் என்னவென்றால், ஒவ்வொரு வேளை உணவை சாப்பிட்டு முடித்த பின்னரும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுவது. ஏனெனில் இதன் இனிப்பு சுவை உணவிற்கு பின் வாய் பகுதியை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், பெருஞ்சீரகம் இது காப்பர், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ், வைட்டமின் சி, இரும்பு, செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் செறிவூட்டப்பட்ட மூலமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி இருக்கும் பெருஞ்சீரக விதைகளை (fennel seeds) தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் பெருஞ்சீரக விதைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை. ஒரு தேக்கரண்டி அதாவது சுமார் 6 கிராம் உலர்ந்த பெருஞ்சீரகம் விதைகள் மூலம் சுமார் 2 கிராம் நார்சத்து கிடைக்கிறது. ஒரு ஆப்பிளில் 3-4 கிராம் வரை மட்டுமே நார்ச்சத்து இருக்கிறது. தினசரி நமக்கு தேவையான நார்ச்சத்தின் அளவு 25-30 கிராம் வரை. வயிற்று காய்ச்சல் மற்றும் டயரியா உள்ளிட்டவவை சரியாக நார்ச்சத்து தேவைப்படுகிறது.
பெருஞ்சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் விதைகள் இரண்டிலுமே நுண்ணுயிர் எதிர்ப்பி பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஃபங்கல் குணங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் தேவையற்ற வாயு கோளாறுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது.