இந்த மருந்தானது சில புற்றுநோய் சிகிச்சைகளுக்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறுக்கு இரட்டை மருந்து (dual drug) சிகிச்சையை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் நாள்தோறும் எப்படியாவது குடிக்க முயற்சி செய்வார்கள். அவர்களால் ஒருநாளும் குடிக்காமல் இருக்கமுடியாது. அவர்கள் பெரும்பாலும் ஆல்ஹகால் பயன்பாட்டுக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. அந்த போதை பழக்கத்தில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாது அல்லது எப்படி வெளியே வருவது என தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறைகளுக்கு சிக்கல் இல்லாமல் அல்லது பக்கவிளைவுகள் இல்லாத இரட்டை மருந்து சிகிச்சையை அமெரிக்க அய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் கண்டுபிடித்த இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. எலிகளைக் கொண்டு பரிசோதிக்கப்பட்ட இந்த ஆய்வு முறைகள், நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறையில் கிடைக்கும் பலன்களைவிட, வெற்றிகரமான முடிவுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆய்வாளர் டோரிட் ரான் பேசும்போது, ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறு என்பது நினைவகத்தின் செயல்முறை எனத் தெரிவித்துள்ளார்.
மூளையில் வலுவாக பதிந்திருக்கும் முடிவுகளினால் இந்தப் பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்துள்ள அவர், அந்த குறிப்பிட்ட நரம்பு பாதைகள் தடுக்கப்ட்டால் அல்லது திசைதிருப்பப்பட்டால், ஆல்கஹால் பயன்பாட்டுக்கோளாறு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனத் தெரிவித்துள்ளார். பொதுவாகன ஆல்ஹால் பயன்பாட்டுக்கோளாறு என்பது நரம்பியல் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால், அவற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வகையில் நினைவகங்கள் மற்றும் எண்ண ஓட்டத்தின் சங்கமங்கள் உருவாக காரணமாக இருக்கும் mTORC1 என்ற நொதியை ஆய்வு செய்ததாக டோரிட் ரான் தெரிவித்துள்ளார்.