ஜி.எஸ்.டி வரி வசூலை நீக்க வலியுறுத்தி மாநில அரசுகள் கோரிக்கை!!

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறதி. காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் ஐந்து சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கொரோனா தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு வரிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைக்கும் எனத் தெரிகிறது.

இந்தநிலையில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டர் பதிவில்,

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ்களுக்காகவும், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும், வென்டிலேட்டர்களுக்காகவும், ஆக்சிஜன்களுக்காகவும், மருந்து, தடுப்பூசிகளுக்காகவும் தடுமாறி வருகிறார்கள். ஆனால், உயிர் காக்கும் பொருட்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிப்பது கொடூரத்தையும், உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது. அதை உடனடியாக நீக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Imposing GST on essential medical products like oxygen, ventilators, vaccines and medicines during a pandemic is cruel and insensitive.

In today’s GST Council meet, the government should remove GST from all life saving medicins and equipment that are being used to fight Covid pic.twitter.com/yjPI3K0BUm— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 28, 2021

-செய்தியாளர்
செய்யது அலி.