ஊட்டி-ஊட்டி சீசனின் முதல் நிகழ்ச்சியாக, குதிரை பந்தயம் வரும் 14ம் தேதி துவங்குகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக, ஆண்டுதோறும், ‘மெட்ராஸ் ரேஸ் கிளப்’ சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. ‘கொரோனா’ காரணமாக, இரண்டாண்டுகளாக குதிரை பந்தயம் நடத்தப்படவில்லை.
நடப்பாண்டு குதிரை பந்தயம், வரும் 14ல் துவங்கி ஜூன் வரை நடக்கிறது. பந்தயத்தில் பங்கேற்க சென்னை, மும்பை, பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத், கோல்கட்டா பகுதிகளில் இருந்து 420 குதிரைகள் வந்த வண்ணம் உள்ளன. 30 ஜாக்கிகள், 30 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.’டர்பி, 1000 கின்னீஸ், 2,000 கின்னீஸ், நீலகிரிதங்க கோப்பை’ உள்ளிட்ட முக்கிய பந்தயங்கள் நடக்க உள்ளன. பந்தயத்தில் பங்கேற்க உள்ள குதிரைகளுக்கு, காலை, மாலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.