தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரியும் தஞ்சை செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி நவபாரதி மீது சிவகங்கை தென்னலிவயல் விஜயலெட்சுமி என்பவர் அளித்த மோசடி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். பல முறை ஒரு கோடியே 29 லட்சம் ரூபாயை நவபாரதிக்கும், நவபாரதியின் கணவர் பெயரிலும், அவர்கள் சொன்ன பெயர்களுக்கு வங்கி பணபரிமாற்றம் செய்துள்ளார்கள். கடந்த ஓராண்டான பின்பு முதிர்வு தொகை கிடைக்க வேண்டிய நேரத்தில் பணம் கேட்தற்கு பணம் தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வருவதோடு, கொலை மிரட்டல் விட்டதால் சிவகங்கை விஜயாலட்சுமி மாவட்ட குற்ற பிரிவில் அளித்த புகாரில் தஞ்சாவூரை சேர்ந்த நவபாரதி, அவரது கணவர் செந்தில்குமார் இருவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.,