1954 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அனல் பறக்கும் சிம்மக்குரலில்,நடிகை கண்ணாம்பாவின் தீந்தமிழ் சாரீரத்தில்,கலைஞர் மு.கருணாநிதியின் எழுத்தோவியத்தில் எல்.வி.ப்ரஷாத் இயக்கத்தில் உருவான “மனோஹரா”திரைப்படம் வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தமிழ்த்திரையில்”மனோஹரா “மாபெரும் வெற்றி கண்ட சரித்திரம் நிறைந்த படம். இப்படத்தில் சிவாஜி கணேசனும்,கண்ணாம்பாவும் வசன மழையை புயலாய் பேசியிருப்பார்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள்.
“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோஹரா “.”எதற்காக உன்னை அழைத்து வர செய்திருக்கின்றேன் தெரியுமா,நிறுத்தும் அழைத்து வரச்செய்யவில்லை இழுத்துவரப்பட்டுள்ளேன்.”எடும் உமது வாளை,என் வாள் களத்திலேதான் விளையாடும் கனிகளை காயப்படுத்தாது”.
“அழியப்போகும் நேரத்தில் அரும்பு முளைத்திருக்கின்றது”.இப்படத்தில் வசந்தசேனையாக வில்லி வேடத்தில் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி நடித்த நடிப்பு அபாரம்.அதுவரையில் அரோஹரா(புராண பக்திப்படஙகள்) பாடிக்கொண்டிருந்த தமிழ் சினிமா “மனோஹரா “வின் வருகைக்கும் பின்
சற்று மாற்றம் கண்டது. இப்படத்தின் வசனங்கள் புத்தக வடிவில் வெளிவந்து அமோக விற்பனையானது.கலைஞரின் வசனங்களுக்கு சிவாஜி கணேசன் உயிரூட்டிய “மனோஹரா “தமிழ் திரைக்கு ஓர் சகாப்தம்.இப்படம் தெலுங்கு,ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அதிலும் வெற்றி கண்டது. ஏற்கனவே நாடகமாக அரங்கேறி மக்கள் மத்தியில் பெரும் புகழடைந்த கற்பனை நிறைந்த ஓர் சோழ சாம்ராஜ்ய கதையை திரைக்கேற்ப சீரமைத்து அமோக வெற்றி கண்ட, தமிழ்த்திரை வரலாற்றில் ஓர் அருந்தமிழ் பெட்டகமாக நிறைந்த காவியம் “மனோஹரா “.சிவாஜி கணேசன் என்ற கலைச்சிம்மம் மனதில் மனோரதமாக அமைந்த வீரவரலாற்று திரையோவியம் “மனோஹரா “.தூய்மையான தீந்தமிழை காண விரும்பும் இக்கால இளையோ�
தகவல் விக்னேஸ்வரன்