”பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,” என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கரூர் பரத நாட்டிய பள்ளி ஆசிரியை ஒருவர், ஒரு மாதத்துக்கு முன், பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஒரு மாதமாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author