சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 438 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 7,788 பேர் அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது, அதற்கு முந்தைய நாள் பாதிப்புடன் ஒப்பிடும் நிலையில் சற்று அதிகமாகவே உள்ளது.
தொற்று பரவுவதால், 2.6 கோடி மக்கள் தொகை உடைய ஷாங்காய் நகரில் கடந்த வாரம் முதல், இரு கட்டங்களாக ஊரடங்கு அமலானது. இதில் புடோங்கில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்துகள் மற்றும் சுகாதார சேவை முழுமையாக கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.