நமது நாட்டின் எல்லையை வரையறுப்பவர்கள் இமயம் முதல் குமரி வரை என்று சொல்வதுண்டு. அதன்படி நாட்டின் தென் எல்லையாக அமைந்துள்ள குமரி முனை, பூகோள வரைபடத்தின் பாதப்பகுதியாக அமைந்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்துக்கு வந்து செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் குமரி மாவட்டத்துக்கு வந்து செல்பவர்களின் பயண நேரம் அதிகரிக்கிறது. ரெயில்கள் மூலமாக வருகை தருபவர்கள் குறைந்தது 1 நாள் முதல் அதிகபட்சமாக 5 நாட்கள் வரையிலும், விமானங்கள் மூலமாக வருபவர்கள் குறைந்தது ஒரு நாள் முதல் அதிகபட்சமாக 2 நாட்கள் வரையிலும் பயண நேரமாக செலவிட வேண்டியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.