குழந்தைகளுக்கு மருந்தாகும் !
பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு (பெயர் சொல்லாதது) மற்றும் ஓமம்.
வசம்பு மற்றொரு பெயர் (பெயர் சொல்லாதது) இதை நாட்டு மருந்துக்கடைகளில் வசம்பு கொடுங்கள் என்று கேட்டாள் தர மாட்டார்கள் பெயர் சொல்லாதது என்று சொல்லி கேட்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வசம்பு ,ஓமம் மிகச்சிறந்த நிவாரணி. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளும் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு செல்லும் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.
இதற்கு தீர்வு வசம்பை சிறிது தீயில் கருகி உரைத்து தோல் போன்று எடுத்து அதனை கொதிக்கும் தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் தண்ணீர் ஆகும்வரை நன்றாக கொதிக்க வைத்து, ஆறிய பிறகு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் வயிற்றுப் போக்கு அத்தனையும் இந்த வசம்பு கட்டுப்படுத்தும்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்