திருவள்ளுவர் திருநாள்

               வாழ்த்துகள்

             உலகப் பாவை

       30. தலை நிமிர்ந்து வாழ்

சிந்திட்ட குருதி போதும் ;

சிவந்தவர லாறு போதும்; சொந்தங்கள் கூடச் சூழ்ச்சி

சூதுகளால் மடிதல் போதும்;

வெந்திட்ட புழுக்கள் போல வேதனையால் மாந்தர் நாளும் நொந்துள்ளம் வெம்பி வெம்பித் துயரத்தில் வீழ்தல் போதும்;

வந்திட்டோம் வாழ்ந்தோம்

என்று

வாழ்ந்திட்ட வாழ்க்கை

போதும்;

தந்திட்டோம் மேன்மை என்று தலைநிமிர்ந்து வாழ்வ

தெந்நாள்?

அந்நாளே ஒருமைப் பாடு அரும்புகிற பொன்னாள் என்று வந்தித்துக் கூறி நாளும்

வலம்வருவாய் உலக பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

About The Author