மாமல்லபுரம் : கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகளில், வாகன, சுங்க கட்டணம், இன்று முதல் வசூலிக்கப்படுகிறது. சென்னை – புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை; சென்னை, மத்திய கைலாஷ் – சிறுசேரி, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய தடங்கள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.இரு வழித்தடங்களிலும், வெவ்வேறு தொலைவு பிரிவுகளில், வாகன சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுக்க, கடந்த மாதம் 10ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இச்சாலைகளில், சுங்க கட்டண வசூல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிப்பதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்

About The Author