நத்தம்-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியமலையூர் வலையில் ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவி அஞ்சலையை 22, மகள் மலர்விழியுடன் 2, எரித்துக்கொலை செய்த கருப்பையாவை 28, போலீசார் கைது செய்தனர்.
வலசை சிவக்குமார் மனைவி அஞ்சலை. இவரது மகள் மலர்விழி. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அஞ்சலை மகளுடன் மலைப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். அங்கு சென்ற கணவரின் அண்ணன் கருப்பையா, அஞ்சலையை ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். மறுத்ததால் ஆத்திரமுற்ற கருப்பையா அஞ்சலையையும், மலர் விழியையும் கத்தியால் குத்தியுள்ளார். பின் இருவரையும் தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு தப்பினார்.
இருவரும் மாலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். இருவரும் எரிந்த நிலையில் கிடந்தது குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் விசாரித்தார். இக்கொலையில் கருப்பையா ஈடுபட்டது தெரிந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.