About us
-
25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்
நெல்லை அதிகாலை, ஏர்வாடி போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையாளர் நவீன் வயது- 26, (எல்என்எஸ்புரம்) ஏர்வாடி. அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ₹4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை
கன்னியாகுமரிஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ₹4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை பொருட்களை மடக்கிப் பிடித்தார் பெண் காவல் உதவி ஆய்வாளர்!.ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை!
-
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி
அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் ரயிலில் அரிசி கடத்தப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து ரயில்வே பாதுகாப்பு படை, காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரேசன் அரிசி சிக்கியது
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
அரியலூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் திரு சிவசங்கர் தொடங்கி வைத்தார் தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட பொறுப்பாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
-
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் நடைமுறை தற்காலிகமாக தொடரும்”
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் நடைமுறை தற்காலிகமாக தொடரும்” அமைச்சர் மூர்த்தி தலைமையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, அமைச்சர், ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தேசிய நெடுஞ்சாலை துறை செயலாளர் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை
-
தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன
சென்னை தாம்பரத்தில் இன்டர்லாக் சிக்னல் பணிகள் நடைபெற உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் 23 தினங்கள் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்டர்லாக் சிக்னல் பணிகள் இம்மாதம் 23ம்தேதி முதல் தொடர்ச்சியாக நடக்க உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் பல்வேறு ரயில்கள் பகுதி தூரம் ரத்து, ஒரு சில ரயில்கள்…
-
அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.21 லட்சத்தை முறைகேடு
அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.21 லட்சத்தை முறைகேடு செய்ததாக நெல்லை மாவட்ட தொழில் மைய முன்னாள் மேலாளர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2018-2019ம் ஆண்டு காலக்கட்டத்தில் 500 பேருக்கு இலவச தையல் பயிற்சி வழங்கி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஒரு நபருக்கு…
-
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்குமார் (40). இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை இவரது வீட்டிற்குள் சுதன் குமார். அவரது தாயார் கமலேஸ்வரி (65) மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய 3 பேரை கொலை செய்து ஒவ்வொரு அறையில் ஒருவர்…
-
தஞ்சையில் வழிபாட்டுதலம், கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடை
கோயில், கல்லூரிக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் வழிபாட்டுதலம், கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாறன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது
-
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 11.45 மணியளவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்










