About us

  • 410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு!

    410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு!

    410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு! 2014 – 17 ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு! “போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என்ற நடைமுறைக்காக முந்தைய காலத்தில் நடந்த தேர்வு முறையை கைவிட முடியாது” சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்

    read more

  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1502 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    read more

  • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 21.6 செ.மீ. மழை பெய்துள்ளது. சேரங்கோட்டில் 12.6 செ.மீ., அப்பர் பவானியில் 12 செ.மீ., பந்தலூரில் 10.4 செ.மீ., எமரால்டில் 9.3 செ.மீ., தேவாலா 7.5 செ.மீ., ஓவேலியில் 7.2 செ.மீ., நடுவட்டத்தில் 6.9 செ.மீ., செருமுள்ளி 5.7 செ.மீ., பாடந்தொரையில் 5.5 செ.மீ., கூடலூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

    read more

  • திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள் தொடங்கியது. எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம், மேல்மாளிகைப்பட்டு போன்ற பகுதிகளில், சுமார் 1703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரம் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அறிவுசார் நகரத்துக்கான நில எடுப்பு பணிகளுக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள், அறிவுசார் தொழிலகங்கள் நவீன நகரத்தில் அமைக்கப்படும். மேல்மாளிகைப்பட்டு…

    read more

  • வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு, கேரள எல்லையிலும் மழை பெய்து வருகிறது. அத்துடன், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, கோவை, மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும்,…

    read more

  • சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 4 விமானங்கள் இன்று ரத்து

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 4 விமானங்கள் இன்று ரத்து

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், டெல்லி, அயோத்தி செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காலை 8.35க்கு அயோத்திக்கு செல்ல வேண்டிய விமானம், இரவு 8.55 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது

    read more

  • ஸ்ரீவில்லிபுத்தூர்  வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின்வெட்டிப்பாறை, ராக்காச்சி அம்மன் ஓடை பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது

    read more

  • அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

    அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

    சென்னை அமமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜூலை 24-ல் நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் ஜூலை 24 காலை 9 மணிக்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

    read more

  • பிரபாகரன், கட்டுமான நிறுவனர் பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

    பிரபாகரன், கட்டுமான நிறுவனர் பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

    தேனாம்பேட்டையில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்

    read more

  • புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை

    புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை

    புதுச்சேரி சாராயக்கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், சாராயக்கடை வழக்கில் சிக்கியவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் இரவு 10 மணிக்குள் அனைத்து சாராயக் கடைகளும் மூடப்படவேண்டும். அனைத்து சாராயக்கடைகளையும் இரவு 10 மணிக்குள் மூடாவிட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

    read more