About us
-
ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர்
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணி, பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு பணிகளாலும் குடியிருப்பு பகுதிகளில் தோண்டிய பள்ளங்களாலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் புதிய சாலைகள் அமைக்கவும் சென்னை மாநகராட்சி…
-
ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி
ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.141.29 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் போலீஸ் பதில்மனு தாக்கல் செய்தது. 2021 முதல் தற்போது வரை மொத்தமாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 1,524 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.180.70 கோடி முடக்கம் செய்யப்பட்டது. மோசடி…
-
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கின் விசாரணையை ஜூலை 22-க்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது உத்தரவிட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டது
-
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 7 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரையும் ஜூலை 31-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்
-
கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோலம் பாசன வாய்க்காலில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கதண்டு வண்டு கடித்துள்ளது
-
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
19.07.2024 அன்று ஓமலூர் வீரபாண்டி கொங்கணாபுரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தகவல்..
-
கர்நாடக அரசை கண்டிப்பதாக தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கர்நாடக அரசை கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பருவமழை சாதகமாக இருக்கும்போது, தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடக அரசின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்
-
ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது
கப்பலில் பயணித்த 13 இந்தியர்களை காணவில்லை என தகவல் 13 இந்தியர்கள் உட்பட 16 பேரை தேடும் பணி தீவிரம்
-
வெள்ள அபாய எச்சரிக்கை
உதகை குந்தா அணை திறக்கப்பட்டதால் தெப்பக்காடு – மசினகுடி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
சுரண்டையில் 2015ம் ஆம் ஆண்டில் நடைபெற்ற
கொலை முயற்சிதென்காசி மாவட்டம் சுரண்டையில் 2015ம் ஆம் ஆண்டில் நடைபெற்றகொலை முயற்சி வழக்கில்பனங்காட்டு படை கட்சியின் தலைவர்ராக்கெட் ராஜா தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர் – நீதிமன்ற வளாகத்தில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிப்பு










