About us
-
வல்லத்தில் சித்த மருத்துவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்
சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்
-
வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம்
வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது வின்பாஸ்ட் தொழிற்சாலை பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்
-
பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்ய வேண்டும்
பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக அறிந்து புகார் கொடுக்கும் விதமாக பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்ய வேண்டும் விளம்பரம் கொடுக்கப்பட்டதில் இருந்து 8 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் நிதி நிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்து வழக்கில் இணைக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பறிமுதல் செய்த சொத்துக்களை உரிய சட்ட விதிகளை பின்பற்றி விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகையை வழங்க உத்தரவு தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், பணம் இரட்டிப்பாக தரப்படும்…
-
வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன்,
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வாணாபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
-
அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
சேலத்தில் ரூ.92 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மரவனேரி பகுதியில் உள்ள அணைமேடு ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. 650 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலம் சேலம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி போக்குவரத்தை இணைக்கிறது.
-
ரேபரேலி சென்றார் ராகுல்
மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் முதல்முறையாக ரேபரேலி சென்றார் ராகுல் உத்தரப்பிரதேச மாநிலம் ராய் பரேலியில் உள்ளஅனுமன் கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்
-
தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுவனை சுற்றி வளைத்த நாய்கள்
தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுவனை சுற்றி வளைத்த நாய்கள் கொடூரமாக கடித்துக் குதறியது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் ஒருவர் வெளியே வரவே அங்கிருந்து நாய்கள் ஓடிவிடவே அச்சிறுவன் உயிர் தப்பினான் இச்சம்பவம் எங்கு நடந்தது என்று தகவல் இன்னும் வெளிவரவில்லை ஆனால் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
-
உதகை சிறப்பு மலை ரயில் சேவை
உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு
-
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
நாய்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்தால் கூட நாய் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்









