About us
-
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு! கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
-
வாட்ஸ் அப்-ன் அடுத்த அசத்தல் அப்டேட்!
வாட்ஸ் அப்-ன் அடுத்த அசத்தல் அப்டேட்! ‘ஃபேவரைட்ஸ் ஃபில்டர்’ (Favorites Filter) எனப்படும் ஒரு புதிய அம்சம் வாட்ஸ் அப்-ல் அறிமுகம். இதன் மூலம் பயனர்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்களையும் குழுக்களையும் ஒரு பட்டியலாக உருவாக்கி சாட்-ன் முன் வரிசையில் வைக்க முடியும்! மேலும் அதிகம் தொடர்பு கொண்ட காண்டாக்ட்-கள் மற்றும் குரூப்-களை விரைவாக கண்டுபிடிக்க உதவும்!
-
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் இன்று நள்ளிரவு 11.59 வரை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். குரூப் 2, 2-ஏ பதவிகளில் காலியாக உள்ள 2,327 இடங்களுக்கு செப்.14 இல் முதல்நிலைத் தேர்வு நடக்கிறது
-
இயக்குநர் பா.ரஞ்சித்
மக்களின் பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று தான் திமுகவிற்கு வாக்களித்தேன்;பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயலாத நிலையில் 2026 தேர்தலில் எனது அரசியல் நிலைப்பாடு மாறும் இயக்குநர் பா.ரஞ்சித்
-
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
2-வது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்த வழக்கில் 35 நாட்களாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். கேரளாவில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றொரு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.
-
அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் வரும் 24ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும்: அக்கட்சி அறிவிப்பு அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வரும் 24ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில் தேனியில் நடைபெறும் என அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிடவும், தமிழகத்தில் அம்மா பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நமது அம்மா மக்கள்…
-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 21.6 செ.மீ. மழை பெய்துள்ளது. சேரங்கோட்டில் 12.6 செ.மீ.,அப்பர் பவானியில் 12 செ.மீ.,பந்தலூரில் 10.4 செ.மீ., எமரால்டில் 9.3 செ.மீ.,தேவாலா 7.5 செ.மீ., ஓவேலியில் 7.2 செ.மீ., நடுவட்டத்தில் 6.9 செ.மீ., செருமுள்ளி 5.7 செ.மீ.,பாடந்தொரையில் 5.5 செ.மீ.,கூடலூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1502 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் – சென்னை வானிலை மையம்
நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் – சென்னை வானிலை மையம் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் 2 முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு; திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
-
அம்மா உணவகங்களை மேம்படுத்தவும் உத்தரவு
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் அறிவுரை ரூ.21 கோடி செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தவும் உத்தரவு அம்மா உணவகங்களை அவ்வப்போது நேரில் ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்










