கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் !
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் !
மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு.
நாளை முதல் தமிழகத்தில் டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை – தமிழக அரசு.
காய்கறி, மளிகை கடைகள் இனி காலை 6
மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் – தமிழக அரசு.
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை – தமிழக அரசு.
E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி – தமிழக அரசு.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும்.அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள் – தமிழக அரசு.
ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி – தமிழக அரசு.