கலைஞர் நினைவிடத்தில் சான்றிதழ்களை சமர்பித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு க ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதிச் சுற்றில் அவர் ஒரு
1 லட்சத்து 5 ஆயிரத்து 794 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியை அடைந்தார் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 35 ஆயிரத்து 214 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் 70 ஆயிரத்து 580 வாக்குகள் வித்தியாசத்தில் மு க ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததை யடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு
மு.க.ஸ்டாலின் சென்றார். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் சான்றிதழ்களை சமர்பித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.