கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். இது தொடரபாக போலீசார்  4 பெண்கள் உள்பட  14 பேரை கைது  செய்தனர். இது தொடர்பான வழக்கு  கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடிபெற்று வந்தது.

இஅத வழக்கில்  நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு  நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்துள்ளார்.  ஒருவர் காலமாகி விட்டார்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

செய்தி ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author