திருப்பூரின் நகர் மத்தியில், ரெயில் நிலையம் அருகில் சுமார் 7.5 ஏக்கர் பூமியில் அமைந்துள்ளது.. இன்று அதன் நிலத்தின் மதிப்பு மட்டும் சுமார் 400-500 கோடி வரும். ஜெய்வாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூரின் பெருமை என திருப்பூரின் சிறப்புமிகு அடையாளம் என சொல்லலாம்.
இவ்வளவு மதிப்புமிகு இடத்தை தனி நபர் ஒருவர்தான் இலவசமாக தந்து பள்ளிகட்டி தந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு தொழில் செய்ய வந்த திரு.D.O.ஆஷர் என்பவர்தான் அவர்.
பெண்களுக்கு கல்வி என்பது மிகவும் அவசியம், அதற்காக ஒரு பள்ளி கட்ட வேண்டுமென்பது தொழிலதிபதிபர் ஆஷர் மனைவி ஜெய்வாபாய் அவர்களின் நீண்ட நாள் விருப்பம்.
1937ம் வருடம் நான்காவது பிரசவத்தில் உயிர் பிழைப்பது அரிது என உணர்ந்துவிட்ட கடைசி நேரத்தில் இதை வாக்காக தனது கணவரிடம் கேட்டு தனது 33வது வயதில் உயிரிழந்துள்ளார்.
மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைத்து 1944ல் அவர் இந்த பள்ளியை கட்டி நகராட்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நல்ல உள்ளம் கட்டிய தரமான கருங்கல் கட்டிடம் என்பதால் இன்றும் துளி விரிசல் இன்றி கம்பீரமாக உள்ளது.
தனியார் பள்ளிகளை விட இந்தப் பள்ளியில் இடம் கிடைக்க கடுமையான போட்டி உள்ளது.
காரணம் குளுமையான சூழல், தரமான கல்வி. இதில் சுமார் 6000க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.
திருப்பூரின் பெருமைமிகு அடையாளமாக விளங்கிவருகிறது.
செய்தியாளர் S.S. சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்

