மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்கு போட்ட பரிதாபம்.

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்ற தூய்மை பணியாளர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மொட்டை மாடியில் கொடி கம்பத்தில் தூக்கு போட்டு கொண்டார். இதனை கண்ட தல்லாகுளம் உதவி ஆய்வாளர் வேல்முருகனின் உடலை தீயணைப்பு வீரர்களின் உதவியோடு கீழே இறக்கி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இவ்வாறு வேல்முருகன் என்கிற தூய்மை பணியாளர் தூக்கு போட்டு கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேல்முருகன் தூக்கு போட்டு கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றது.

நன்றி : செய்தியாளர் – வி காளமேகம், மதுரை

தகவல் – சுகந்தி, ஜெர்மனி