பாவேந்தரும் தமிழும் – தொடர் – 28
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்
????????
ஒருகவிஞன்மறைந்த
பின்பும்வாழ்க்கைச்
சுவடுஅவன்சமுதாயப்
பணியைப்பேச
வேண்டும்..
அந்தவகையில்
திருச்சியில்அமைந்த
பாரதிதாசன்
பல்கலைக்கழகமும்
பாவேந்தர்பாரதிதாசன்
விருதும்பல்துறை
வித்தகர்களை
உருவாக்கிவருகிறது.
பாவேந்தருக்குபெருமை
சேர்த்துவருகிறது.
❤️
கவிஞன்
சமுதாயத்தைகூர்ந்து/
பார்ப்பவன்..
சமுதாயச்சூழல்
பாதிக்கும்போது
கவிஞன்பிறக்கிறான்
பாரதியின்எழுத்துமுரசு
இந்தியவிடுதலையை
முழங்கியது..
பெண்மையை
சாதியைச்சாடினான்
மகாகவி
பாவேந்தரின்
எழுத்துமுரசு
தமிழ்ச்சமுதாய
விடுதலையை
முன்னிறுத்தியது..
பெண்ணின்
அடிமைச்சின்னத்தை
உடைத்துவிதவைப்
பெண்ணைமறு
வாழ்க்கைக்குத்
தூண்டினான்
சாதியைஆணி
வேரோடுபிடுங்கி
எறிந்தான்
?
பாவேந்தரின்எழுத்து
கட்டுரைபேச்சு
குறுங்காவியம்
சிறுகதைஎன
பகுத்தறிவுஏந்திய
ஆயுதமாய்
சமூகத்தின்மீது
அறிவுகனைகளைத்
தொடுத்தார்..
?
திருவள்ளுவனின்
முப்பாலில்
முனைமழுங்காத
வழிகாட்டுதலில்
கவிதைமரபு
மாறாமல்..புரட்சி
பேசினான்.
❤️
பெண்விடுதலைபற்றி
பாவேந்தர்தொட்ட
வரிகள்காலத்தால்
அழிக்கமுடியாதவை…
?
(அச்சமும்மடமையும்
இல்லாதபெண்கள்
அழகியதமிழ்நாட்டின்
கண்கள் !
தமிழ்நாட்டினைக்
காப்பாய்பெண்ணே!
தமிழினமேன்மையைக்காப்பாய்!
தமிழகம்நமதென்று
ஆர்ப்பாய்!
தடையினைக்
காலினால்தேய்ப்பாய்!)
?
போராட்டக்குணம்
பெண்ணுக்குதேவை
என்கிறார்பாவேந்தர்.
பெண்விடுதலையைப்பாடுவதில்/
பாவேந்தரும்
மகாகவிபாரதியும்
(இருவரும்)
ஒன்றாகிஓரணியில்.
நிற்கிறார்கள்.புகழ்
உடம்புமறைந்தாலும்
பொன்னெழுத்துகள்
என்றும்மறையாது..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
அரசு.மே.நி.பள்ளி
ஒசிறுவயல்
பட்டிமன்றநடுவர்
பாவேந்தர்
அறக்கட்டளை
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்