மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனையடுத்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், வரும் 28-ந்தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

About The Author