விபத்து எதிரொலி -ரயில் சேவைகள் மாற்றியமைப்பு.

கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக சில ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே மாற்றி அமைப்பு.

12663 ஹவுரா- திருச்சி ரயில் எழும்பூர் வராமல் ரேனிகுண்டா, காஞ்சிபுரம், விழுப்புரம் வழியே செல்லும்.

12511 கோரக்பூர்- கொச்சுவேலி ரயில் சென்னை வராமல் ரேனிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியே இயக்கம்.

22663 எழும்பூர்- ஜோத்பூர் ரயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழியே செல்லும்.

22606 நெல்லை- புரூலியா ரயில் அரக்கோணம் வராமல் மேல்பாக்கம், ரேனிகுண்டா வழியே இயக்கம்.

12603 சென்னை- ஐதராபாத் ரயில் சூலூர்பேட்டை வராமல் அரக்கோணம், ரேனிகுண்டா வழியே செல்லும்.