பொதுஇடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் :
சென்னையில் நீர்நிலை, பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டுமான பணியின்போது வெளியேற்றும் கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கட்டிட கழிவுகளை கண்டறிந்து அகற்றிட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி, சென்னை முழுவதும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் சுமார் 7500 தூய்மைப் பணியாளர்கள் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.