கல்விதான் உங்களிடத்திலிருந்து பிரிக்க முடியாத சொத்து என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் அளவிலான கல்வி உதவித் தொகையை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர்; மாணவர்களுக்கு கல்வியே சிறந்த செல்வம்’ என்று குறிப்பிட்டார்.

About The Author